மார்ச் மாதம் தொடங்கும் 2024/2025 அமர்வுக்கு மாணவர்கள் விளையாட்டு உடைகளை அணிந்து பள்ளிக்கு வரலாம் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறுகிறார்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் நடத்தப்பட்ட அமர்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை மற்றும் கூடுதல் தகவல்கள் விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்வதற்காக மாநில கல்வித் துறைகளுக்கு வழங்கப்படும்.
இரண்டு நாட்கள் முறையான பள்ளி சீருடை, இரண்டு நாட்கள் விளையாட்டு உடைகள் மற்றும் ஒரு நாள் இணை பாடத்திட்ட உடைகளுடன், பள்ளிகளில் விளையாட்டு உடைகளை தொடர்ந்து அனுமதிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது,” என்று அவர் தனது புத்தாண்டு செய்தியில் தெரிவித்தார்.
இது பெற்றோரின் சுமையை குறைக்கவும், புதிய பள்ளி அமர்வுக்கு முன்கூட்டியே அவர்களை தயார்படுத்தவும் உதவும்.
வெவ்வேறு உடைகளுக்கு நாட்களை நிர்ணயிக்கும் சுதந்திரம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
-fmt