பாரிசான் – பக்காத்தான் கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும், லோக் நம்பிக்கை

பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையேயான ஒத்துழைப்பு அடுத்த பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ16) அப்பால் தொடரும் என்று டிஏபி பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் இன்று நம்பிக்கை தெரிவித்தார்.

லோக் ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் உண்மையாக உழைத்து வருவதாக கூறினார்.

“யாங் டி-பெர்டுவான் அகோங், சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவின் ஆலோசனையைப் பின்பற்றி, அரசியலைக் குறைத்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்துவோம்.

“எனவே, அந்த உணர்வில், நாங்கள் தொடர்ந்து ஒத்துழைத்து எங்கள் அரசாங்கத்தை பலப்படுத்துவோம். மேலும் இந்த ஒத்துழைப்பு GE16க்கு பின்னரும் தொடரும் என நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, பாரிசான் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, GE16 இல் வெற்றியை உறுதிசெய்ய அவரது கூட்டணியும் பக்காத்தானும்  “உண்மையான ஒப்பந்தத்தை” தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று கூறினார்.

ஜாஹிட்டின் அறிவிப்பு மலாய்க்காரர்களுக்கு GE16 இல் யாரை ஆதரிப்பது என்பதை இப்போது தீர்மானிக்க உதவும் என்று பாஸ் தகவல் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வர் இப்ராஹிம் 2022 நவம்பர் 24 அன்று, தொங்கு நாடாளுமந்தாரத்தில் முடிந்த 15வது பொதுத் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு பதவியேற்றார்.

அவரது பக்காத்தான்-பாரிசான் கூட்டணி , கபுங்கன் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்) மற்றும் கபுங்கன் ரக்யாத் சபாவுடன் இணைந்து வாரிசன் மற்றும் பார்ட்டி பங்சா மலேசியா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்கியது.

கபுங்கன் பார்ட்டி சரவாக் தலைவர் அபாங் ஜொஹாரி ஓபேங் முன்பு சரவாக் கூட்டணி முழு காலத்திலும் அன்வாரை ஆதரிக்கும் என்று கூறினார்.

-fmt