நஜிப் விவகாரத்தில் பொதுமக்களை கேள்வி கேட்க வேண்டாம் என்று கூறாதீர்கள் – மூடா

ஐக்கிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பஹ்மி பட்சில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தண்டனைக் குறைப்பு குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் கூறக்கூடாது, ஏனெனில் அது அவர்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை என்று மூடா தெரிவித்துள்ள்ளது.

இளைஞர் கட்சியின் செயல் தலைவர் அமிரா ஐஸ்யா அப்த் அஜிஸ் கூறுகையில், பஹ்மி பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவான கட்சியான பிகேஆரில் இருந்து வந்தவர் என்பதால் அவரது அறிக்கையால் தாம் ஏமாற்றமடைந்ததாக என்று கூறியுள்ளார்.

“என்ன நடக்கிறது என்பதில் மக்கள் ஏமாற்றமடைந்தால், அரசாங்கத்தை கேள்வி கேட்க அவர்களுக்கு உரிமை உண்டு”. “மேலும் அவர்கள் எந்தப் பிரச்சினையையும் கேள்வி கேட்கும்போது, அவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, தயவுசெய்து அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லாதீர்கள். மக்களின் குரலுக்கு மதிப்பளியுங்கள். “அதுதான் தகவல் தொடர்பு அமைச்சர் மற்றும் ஐக்கிய அரசு செய்தித் தொடர்பாளர் செய்ய வேண்டும்,”என்று அமிரா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அனைத்து தரப்பினரும் மன்னிப்பு வாரியத்தின் முடிவை மதிக்க வேண்டும் என்றும் நஜிப்பின் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் மீதான அவரது SRC இன்டர்நேஷனல் வழக்கில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பஹ்மி வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் இவ்விவகாரத்திற்கு மிகையாக செயல்படுபவர்கள் மீது காவல்துறை மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் என்று பஹ்மி எச்சரித்திருந்தார்.

மன்னிப்பு வாரியத்தின் உறுப்பினர்கள், குறிப்பாக ஜலிஹா மற்றும் அட்டர்னி ஜெனரல் (ஏஜி) அஹ்மத் டெரிருடின் சலே, நஜிப்பின் சிறை தண்டனை மற்றும் அபராதத்தை குறைப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும், இது அவர்களின் தார்மீகக் கடமை என்றும் அமிரா கூறினார்.

“கடந்த காலத்தில் நஜிப் செய்ததை மூடா மறக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

அட்டர்னி ஜெனரல் மற்றும் ஜாலிஹா இருவரும் மன்னிப்பு வாரியத்தில் அமர்ந்துள்ளனர், இது யாங் டி-பெர்டுவான் அகோங் தலைமையில் உள்ளது.

 

 

-fmt