டாக்டர் மகாதீர் முகமத்துவின் இரண்டு மகன்களான மிர்சான் மற்றும் மொக்சானி ஆகியோர் ஊழல் மோசடியில் தங்கள் சொத்துக்களை வெளியிடத் தவறினால் குற்றவியல் வழக்குகள் தொடரக்கூடும் என்று MACC எச்சரித்துள்ளது
MACC சட்டத்தின் 36வது பிரிவின் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை என்றும் MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.
“நாங்கள் நிர்ணயித்த காலக்கட்டத்தில் அவர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்கத் தவறினால் அவர்கள்மீது குற்றம் சாட்டப்படலாம்,” என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியாமேற்கோள் காட்டியுள்ளது.
இந்த மாதத்தின் நடுப்பகுதியில் அறிவிப்புக் காலம் முடிவடைந்தவுடன் இருவரும் கூடுதல் அவகாசம் கோரலாம் என்றும் அசாம் சுட்டிக்காட்டினார்.
மொக்ஸானி மகாதீர்
MACC கடந்த மாதம் மிர்சான் மற்றும் மொக்சானி ஆகியோரை விசாரணைக்கு அழைத்தது. அவர்களுடைய விசாரணையின் அடிப்படை தெளிவாக இல்லை.
MACC சட்டத்தின் 36வது பிரிவின்படி, பெறுநர்கள் கமிஷன் வெளியிடும் அறிவிப்புகளுக்கு இணங்க வேண்டும்.
சொத்துக்களை அறிவிக்க MACC யின் கோரிக்கைகள் இதில் அடங்கும் ஆனால் அவை மட்டும் அல்ல.
இணங்கத் தவறினால் ஐந்து ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் ரிம 100,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
முன்னதாக, முன்னாள் நிதியமைச்சர் டெய்ம் ஜைனுதீன் மற்றும் அவரது மனைவி நயிமா அப்துல் காலித் ஆகியோர் தங்கள் சொத்துக்களை வெளியிட வேண்டும் என்ற நோட்டீஸை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.