சுதந்திரதிற்கு பிறகும் காலனித்துவ சட்டங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன – ஹாடி

நாடு சுதந்திரம் அடைந்த போதிலும், காலனித்துவ சட்டங்களைப் பேணுவதில் இஸ்லாமிய நாடுகள் தங்கள் ஒருமைப்பாட்டை இழந்து வருவதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தில் இஸ்லாம்தான் நாட்டின் அதிகாரபூர்வ மதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், மாறாக, மற்ற மதங்களை சுதந்திரமாக நடைமுறைப்படுத்தலாம், இருப்பினும்,  இஸ்லாமிய நலன்களைப் புறக்கணித்து பல சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்கிறார் ஹடி..

“மறைந்த முகமது சலே அபாஸ் மற்றும் மறைந்த ஹருன் ஹாஷிம் போன்ற புத்திசாலித்தனமான நீதிபதிகள் நம்மிடம்  இருந்தனர்.

“முஹமட் அப்துல் ஹமீத், அஹ்மத் ஃபைரூஸ் அப்துல் ஹலீம் மற்றும் இஸ்லாமிய சட்டங்களை (சிவில் நீதிமன்றங்களுக்குத் தலைமை தாங்கும் போது) நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தியவர்கள் போன்ற இன்னும் உயிருடன் இருப்பவர்களும் உள்ளனர்” என்று ஹாடி இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

“இருப்பினும், தற்போது , காலனித்துவ சிந்தனையால் பாதிக்கப்பட்ட  நீதிபதிகளும் உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

“உண்மையான” மதத்திலிருந்து அவர்களைத் திசைதிருப்ப முயலும் கட்சிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் எழுச்சி பெறவும், இஸ்லாத்தைப் பாதுகாக்கவும் ஹாடி மேலும் அழைப்பு விடுத்தார்.

ஏனென்றால், நீதிமன்றங்களை அவமதிக்கும் பாவத்தை விட இஸ்லாத்தை அவமதிக்கும் பாவம் பெரியது, இது கடவுளுக்கு முன்பாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

மாராங் எம்.பி., அவரது அறிக்கைக்கு எந்த சூழலையும் கொடுக்கவில்லை.