நீதிபதிகளின் ஞானம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நீதித்துறை மற்றும் மத்திய அரசியலமைப்பைச் சட்டத்தினை அவமதித்துள்ளார்
18 கிளாந்தன் ஷரியா குற்றவியல் விதிகளை நீதிமன்றத்தில் சவால் செய்த வழக்கறிஞர் நிக் எலின் சூரினா நிக் அப்துல் ரஷீதுக்கு ஆதரவாகப் பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த உடனேயே ஹாடியின் அறிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் Amanah இளைஞர் தலைவர் முகமது ஹாஸ்பி முடா இன்றிரவு ஒரு அறிக்கையில் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
“நீதிமன்றத்தின் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றாலும், ஒரு மூத்த எம்.பி. என்ற முறையில் ஹாடி, நீதிபதியின் முடிவு கூட்டாட்சி அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”.
“ஒரு காலத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த எம்.பி.யாக இருந்த ஹாடி, அரசியலமைப்பை திருத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மையான தோல்வி. சட்டமன்ற உறுப்பினராகத் தனது பங்கை நிறைவேற்றுவதில் அவர் காட்டும் கவனக்குறைவையே இது பிரதிபலிக்கிறது,” என்றார்.
சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதற்கும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் நீதியை உத்தரவாதப்படுத்துவதற்கும் நீதித்துறை முக்கிய தூண் என்று ஹாஸ்பி வலியுறுத்தினார்.
“ஞானமுள்ள’ நீதிபதிகள் இருப்பதாகவும், அவர்களின் தலைமையும் மற்றும் மனங்கள் காலனித்துவ பாரம்பரியத்தின் எழுத்துக்களால் பாதிக்கப்படுவதாகவும் ஹாடி எழுதியது, நீதித்துறை நிறுவனங்களையும் நாட்டின் அரசியலமைப்பையும் அவமதிக்கும் ஒரு தெளிவான வடிவமாகும்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கவும்
அரசியலமைப்பை நிலைநிறுத்த உறுதிமொழி எடுத்த எம்.பி என்ற வகையில், இதே போன்ற அரசியலமைப்புகளின் அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை ஹாடி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
“அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், நீதித்துறை நிறுவனங்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் அறிக்கைகளை வெளியிடக் கூடாது,” என்று ஹாஸ்பி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதிலும், அனைத்து குடிமக்களுக்கும் நீதி வழங்குவதிலும் ஒரு தலைவரின் ஆளுமை ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்,” என்று ஹாஸ்பி கூறினார்.
PAS அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது IKI புத்ரா வழக்கில் PAS இளைஞர்களுடைய அழைப்பை அவர் பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
பின்னர், இது அனைத்து மலேசியர்களையும் குறிப்பாக முஸ்லிம்களையும் கூட்டாட்சி நீதிமன்றத்தின் முடிவை ஏற்க வேண்டும் என்றும் நீதித்துறைக்கு கெடுதல் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.