நன்கொடைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் -பிரதமர்

நாட்டில் தொண்டு நிறுவனங்களுக்காக திரட்டப்படும் நிதியை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை தேவை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.

நிதியமைச்சராக இருக்கும் அன்வார், தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டும் போது, அவை இலக்கு குழுக்களுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்ய, ஏற்கனவே உள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

பொறுப்பற்ற தரப்பினரால் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நல்லாட்சியுடன் நிதியை நிர்வகிப்பதற்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை வழங்கும்.

அறக்கட்டளை நிதிகள் முறையான வழிகளில் செல்ல வேண்டும், அதே நேரத்தில் திரட்டப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட தொகை வெளிப்படைத்தன்மைக்காக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

“அதனால்தான் ஆட்சியில் கவனமாக இருக்க வேண்டும். தபிஸ் பள்ளிகளை கட்டுவதற்கு நன்கொடை வசூலிக்க விதிகள் (உதாரணமாக) இருக்க வேண்டும்; இல்லையெனில், வசூல் செய்த பின், வீடுகளை சீரமைக்க பணம் (பதிலாக) பயன்படுத்தப்படலாம் ,”என்று அவர் கூறினார்.

 

 

-fmt