டுபாய் நகர்வு தோல்விக்கு பிறகு பிரதமரை வீழ்த்த எந்தத் தீர்மானமும் சமர்ப்பிக்கப்படவில்லை

எதிர்வரும் நடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மன்னத்தை கொண்டு வருவதற்கான பிரேரணையை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சமர்ப்பிக்கவில்லை.

துபாய் நகர்வு என்று சிலர் அழைத்ததன் மூலம் அன்வாரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் ஆதரவைத் திரட்டுவது குறித்து டிசம்பர் மற்றும் ஜனவரியில் தீவிர ஊகங்கள் இருந்தபோது இது நடந்தது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பிரதமருக்கு எதிரான தீர்மானம் எதுவும் இல்லை  என்று டேவான் ரக்யாட் சபாநாயகர் ஜோஹாரி அப்துல் உறுதிப்படுத்தினார்.

டேவான் ராக்யாட் அடுத்த திங்கட்கிழமை, பிப்ரவரி 26 அன்று, யாங் டி-பெர்துவான் அகோங்கின் அரச உரையுடன் தொடங்கும்.