பேராக் கேகே மார்ட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது

பேராக் மாநிலம் பிடோரில் உள்ள கேகே மார்ட் கடையில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

கடையின் முன் விழுந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை என்று  செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் கேகே மார்ட் விற்பனை நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த போது ஊழியர்கள் கடைக்குள் வேலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக வட்டாரங்கள்  தெரிவித்துள்ளது.

கேகே மார்ட்டின் சன்வே கடையில் விற்கப்பட்ட “அல்லா” என்ற வாசகம் கொண்ட காலுறைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தோன்றி முஸ்லிம் சமூகத்தின் கோபத்தை சம்பாதித்தது, அம்னோ இளைஞர்கள் புறக்கணிக்க அழைப்பு விடுத்ததை அடுத்து கேகே மார்ட் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளது.

இருப்பினும், அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே, காலுறை விற்பனைக்காக மன்னிப்பு கேட்க கேகே மார்ட் நாடு முழுவதும் உள்ள அதன் 881 கடைகளில் பதாகைகளை வைக்க வேண்டும் என்றும், அதற்கு இணங்கத் தவறினால் கடுமையான புறக்கணிப்பு நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

 

 

-fmt