லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கிய 3 போலீசார் கைது

மெர்சிங்கில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கியதாக மூன்று காவல்துறை அதிகாரிகளை MACC கைது செய்துள்ளது.

36 மற்றும் 42 வயதுடைய சந்தேக நபர்கள் நேற்று மாலை 7 மணியளவில் ஜொகூர் MACC அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

“கடந்த ஆண்டு நவம்பரில் மெர்சிங்கில் பனை எண்ணெய் (oil palm) மற்றும் உரங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் ஓட்டுநர்களிடம் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் கீழ் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் ரிம 7,800 கேட்டுப் பெற்றனர்,” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

ஜொகூர் MACC இயக்குநர் அஸ்மி அலியாஸ் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்ததுடன், சந்தேக நபர்கள் இன்று காலை 8.30 மணியளவில் ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.