செவ்வாயன்று கிள்ளான் பல்பொருள் அங்காடியில் ஒரு வயது குழந்தையை கடத்த முயன்ற இரண்டு வெளிநாட்டினர் வழக்கு ஒரு தவறான புரிதல் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் கூறுகையில், குழந்தை தாய் மற்றும் அத்தையுடன் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள், குழந்தையை படிக்கட்டில் ஏறுவதற்கு உதவ முயன்றனர்.
இருப்பினும், குழந்தையின் தாய் அவர்களின் நோக்கங்களை தவறாக புரிந்து கொண்டார். இவை அந்த இரண்டு ஆண்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. “நான் உட்பட போலீசார், சம்பவத்தின் சிசிடிவி காணொளிகளை ஆய்வு செய்துள்ளோம் என்று ஹுசைன் கூறினார்.
குழந்தையின் தாய் மற்றும் பொதுமக்கள் அவர்களைப் பிடித்தபோது இரண்டு வெளிநாட்டவர்களும் தப்பிக்க முயற்சிக்கவில்லை. மேலும் விசாரணையில், செல்லுபடியாகும் பயண ஆவணங்களைக் கொண்ட இவர்கள், அருகிலேயே வேலை செய்து, அடிக்கடி பல்பொருள் அங்காடிக்கு பொருட்கள் வாங்க வருவது தெரியவந்தது. “திட்டமிடப்பட்ட கடத்தலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.
சம்பவத்தைத் தொடர்ந்து இருவரும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் அமர்ந்திருக்கும் காணொளி இணையத்தில் பரவி, அவர்கள் குழந்தையை கடத்த முயன்றதாகக் கூறினர். இது என்எஸ்கே கிள்ளான் சென்ட்ரலில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், போலீசார் இந்த விவகாரத்தில் தங்கள் விசாரணையை முடித்து, ஏதேனும் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டால், அரசு வழக்கறிஞருக்கு அனுப்புவார்கள் என்று ஹுசைன் கூறினார்.
-fmt