காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர்

சிலாங்கூரில் உள்ள புத்ரா ஹைட்ஸ் என்ற இடத்தில் நேற்று இரவு காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆயுதம் ஏந்திய 5 கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான், இரவு 11.30 மணியளவில் நடந்ததாக நம்பப்படும் சம்பவத்தை உறுதிப்படுத்தினார் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

“நாங்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்துவோம்,” என்று அவர் கூறினார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் ஓட்டிச் செல்வதைக் கண்ட போலிஸ் குழு, வாகனத்தை சோதனைக்கு நிறுத்துமாறு உத்தரவிட்டது தெரிய வந்தது.

சந்தேக நபர்கள் கட்டளையைப் புறக்கணித்து, மேலும் வேகமாக ஓட்டும் போது ரோந்து போலிஸ் வாகனத்தின் பின்பகுதியில் மோதினர். அதைத் தொடர்ந்து  காவல்துறையினர் துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டனர். இதன் விளைவாக 5 நபர்கள் இறந்தனர்.