KK மார்ட் புறக்கணிப்பில் பாஸ் பங்கேற்காது

“அல்லா” என்ற வார்த்தை கொண்ட காலுறை விற்பனையைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கேகே மார்ட்டின் புறக்கணிப்பு இயக்கத்தில் பாஸ் இணையாது என்று அதன் சமயப் பிரிவு தலைவர் அஹ்மத் யாஹ்யா கூறினார்.

எவ்வாறாயினும், இஸ்லாத்தை கேலி செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் கட்சி எதிரானது என்று அவர் வலியுறுத்தினார்.

எங்கள் தலைவர்கள் யாரும் கே.கே.மார்ட்டை புறக்கணிக்க அழைப்பு விடுக்கவில்லை.

இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டுமே விரும்புகிறோம். மேலும் நடவடிக்கை எடுத்தால் பிரச்னை முடிவுக்கு வரும் என உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

கேகே மார்ட்டினின் சன்வே கடையில் விற்கப்பட்ட காலுறைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அம்னோ இளைஞர்கள் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து சர்ச்சை எழுந்தது.

அம்னோ இளைஞர் பிரிவின் தலைவரான டாக்டர் அக்மல் சலே, நாடு முழுவதும் உள்ள அனைத்து 881 கடைகளிலும் கேகே மார்ட் பதாகைகளை வைக்கத் தவறியதற்காகவும், முறையாக மன்னிப்பு கேட்காததற்காவும் கடைப் புறக்கணிப்பைத் தொடரப்போவதாக மிரட்டினார்.

செவ்வாயன்று, கேகே மார்ட்டின் நிறுவனர் சாய் கீ கான் மற்றும் இயக்குனர் லோ சியு முய் ஆகியோர் காலுறைகளை விற்பதன் மூலம் முஸ்லிம்களின் மத உணர்வுகளை  புண்படுத்தியதாகக் கூறி ஒரு வழக்கை எதிர்கொண்டனர்.

கே.கே. மார்ட்டுக்கு சாக்ஸ் சப்ளை செய்த பத்து பஹாட்டை தளமாகக் கொண்ட சில்லறை விற்பனையாளரான சின் ஜியான் சாங்கின் மூன்று நபர்கள்  மீதும் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடங்கியது.

இந்த சம்பவம் சார்பாக ஐந்து பேர் நீதிமன்ற விசாரணையில்  இருந்த  போதிலும், இரண்டு கேகே மார்ட் கடைகள் – குவாந்தான், பாக்யாங் மற்றும் பேராக் கிளைகளில் – பெட்ரோல் குண்டுகளால் தாக்கப்பட்டது.

அக்மல் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புறக்கணிப்பில் பங்கேற்பவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

-fmt