நோன்பு பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் கூடுதல் உதவித்தொகையை அறிவித்தார் அன்வார்

பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம், ஒப்பந்த நியமனங்களில் உள்ளவர்கள் உட்பட, பகுதி 56 மற்றும் அதற்குக் கீழே உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 500 ரிங்கிட் சிறப்பு பெருநாள் நிதி உதவி மற்றும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 250 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அன்வார் அறிவித்துள்ளார்.

இந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) முதல் விநியோகிக்கப்படும் சிறப்பு உதவிக்காக கருவூலத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன், என்று அவர் இன்று பிரதமர் துறையுடனான மாதாந்திர கூட்டத்தில் தனது உரையில் கூறினார்.

வரவிருக்கும் ஹரி ராயா பெருநாள் கொண்டாட்டத்துடன் அரசு ஊழியர்களுக்கு மேலும் “சிறப்பு” கொடுப்பனவுகள் இருக்காது என்று அன்வார் மார்ச் 24 அன்று கூறிய போதிலும் இந்த அறிவிப்பு வந்தது.

சிறப்பு ஊக்கத் தொகைக்கான கியூபெக்ஸ் இன் அழைப்பிற்கு பதிலளித்த அன்வார், பிப்ரவரி 23 அன்று வழங்கப்பட்ட ரிம 2,000 இன் முன்கூட்டிய ஊக்கத்தொகை ஹரி ராயாவுக்கானது என்று அந்த நேரத்தில் கூறினார்.

இன்று அவர் ஆற்றிய உரையில், அரசு ஊழியர்கள் மீது அரசாங்கம் அலட்சியமாக உள்ளது என்ற கூற்றை பிரதமர் மறுத்தார்.

நாடு முழுவதிலும் உள்ள பல பகுதிகளுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயங்களின் போது அரசாங்க ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களால் விசேச நிதி உதவி வழங்குவதற்கான தீர்மானம் தூண்டப்பட்டதாக அவர் கூறினார்.

“நான் நேற்று சில அரசு ஊழியர்களைச் சந்தித்தபோது, அவர்கள் பெருநாள் சிறப்பு கொடுப்பணர்வுகளில் திருப்தியடைகிறீர்களா என்று கேட்டேன். பலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தத் தயங்கினார்கள், ஆனால் மற்றவர்கள் அது ஏற்கனவே செலவிடப்பட்டதாகக் கூறினர்.

எனது முந்தைய அறிக்கையைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் (சுகி அலி) கூட இந்த விஷயத்தைக் கொண்டு வரத் தயங்கினார், எனவே நான் அவரிடம் இது குறித்து இதுவரை பேசவில்லை. ஆனால் மக்களின் உணர்வுகளை நான் அறிவேன், என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் முன்முயற்சிகள் மற்றும் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை குறைப்பதற்கு பொதுமக்களுக்கு உதவிகளை வழங்குவதில் அனைத்து அரசு ஊழியர்களும் அதிக முனைப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான விடயங்களில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த உதவுமாறு அவர் அரசாங்க ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அரசு ஊழியர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் சாதனைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறினார்.

பகாங் அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் 

இதற்கிடையில், பகாங்கில் உள்ள சுமார் 8,000 அரசு ஊழியர்கள் தலா 1,000 ரிங்கிட்  சிறப்பு பெருநாள் உதவியைப் பெறுவார்கள் என்று மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் நேற்று இரவு அறிவித்ததாக, பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

ஹரி ராயாவுக்கு முன்பாக இந்த உதவி விநியோகிக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

 

-fmt