பாசிர் மாஸில் உயிருடன் புதைக்கப்பட்ட பின்னர் கிணறு தோண்டியவர் இறந்தார்

நேற்று பாசிர் மாஸில் உள்ள டோக் உபானில் உள்ள கம்புங் கெலாம் மசூதியில் புதிதாகத் தோண்டப்பட்ட கிணற்றில் சிமெண்ட் வளையத்தைக் கீழே இறக்கும்போது ஒரு கிணறு தோண்டியவர் உயிருடன் புதைக்கப்பட்டார்.

இறந்தவர் 23 வயதான முகமது கைருல் ஜெஃப்ரி மாரோஃப் என அடையாளம் காணப்பட்டதாகப் பாசிர் மாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைகளின் தளபதி அட்னான் மாட் ஜூரி தெரிவித்தார்.

நேற்று மாலை 5.54 மணிக்கு ஒரு துயர அழைப்பு வந்தபின்னர் நிலையத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

“அன்று மாலை 6.17 மணிக்குச் சம்பவ இடத்திற்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் சுமார் ஆறு மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் புதைக்கப்பட்டார் என்று கண்டறியப்பட்டது,” என்று அவர் நேற்றுத் தகவல் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் இரவு 7.15 மணியளவில் பொதுமக்களின் உதவியுடன் கொண்டுவரப்பட்டு, மருத்துவ பணியாளர்கள் இறந்ததாக அறிவித்தனர்.

இதனையடுத்து சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் காவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் காவலர் தெரிவித்தனர்.