நஜிப் வீட்டுக்காவல்: மன்னரின் விருப்புரிமையை அரசாங்கம் மதிக்கிறது – அன்வார்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வீட்டுக்காவல் குறித்து முடிவெடுக்கும் முன்னாள் யாங் டி பெர்துவான் அகோங்கின் அதிகாரத்தை மத்திய அரசுக் கேள்வி கேட்காது எனப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இன்று முன்னதாக பிகேஆர் சிறப்பு மாநாட்டில் பேசிய அன்வார், மன்னிப்பு வாரியத் தலைவராக மன்னருக்கு இறுதி உரிமை உண்டு என்றார்.

“மன்னிப்பு வாரியத்தில் எடுக்கப்பட்ட எந்த முடிவும், அகோங்கின் முடிவே இறுதியானது என்பது எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது”.

“மெர்டேகாவிலிருந்து இன்று வரை, மலாய் ஆட்சியாளர்களின் பங்கு மற்றும் அதிகாரத்திற்கு எதிரான எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை”.

பிகேஆரின் 25வது ஆண்டு விழாவையொட்டி  ஷா ஆலமில் நடைபெற்ற மாநாட்டில், “முடிவைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், அரசியல் விமர்சகராக இருக்க தகுதியற்றவர்கள்,” என்று கூறினார்.

ஜனவரியில் முன்னாள் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா அஹ்மத் ஷா வழங்கியதாகக் கூறப்படும் “சேர்க்கை உத்தரவு” மற்றும் ஆவணம் இருப்பதை உறுதிப்படுத்திய துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் வாக்குமூலம்குறித்து அன்வார் கருத்து தெரிவித்தார்.

நஜிப் வழக்கில் செல்லுபடியாகும் நீதிமன்ற தீர்ப்பை மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதையும் பிரதமர் மறுத்தார்.

SRC இன்டர்நேஷனல் வழக்கில் நஜிப்பின் சிறைத்தண்டனையை இந்த ஆண்டு தொடக்கத்தில் மன்னிப்பு வாரியம் ஆறு ஆண்டுகளாகப் பாதியாகக் குறைத்தது.

ஊழல் தொடர்பான ஏழு கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் பிரதமருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரிம210 மில்லியனிலிருந்து 50 மில்லியனாகக் குறைத்தது.