இன்று காலைப் பேரக்கின் லுமுட் ராயல் மலேசிய கடற்படை ஸ்டேடியத்தில் ஒத்திகையின்போது இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டன.
கடற்படையினரின் கூற்றுப்படி, இரண்டு விமானங்களில் பயணித்த 10 பேரும் -ஒரு HOM (M503-3) ஹெலிகொப்டரில் மூன்று பேரும், ஒரு பென்னெக் (M502-6) ஹெலிகாப்டரில் ஏழு பேரும் – 90வது கடற்படை தினக் கொண்டாட்டத்தின்போது காலை 9.32 மணியளவில் இந்த விபத்தில் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கான காரணத்தை அறிய கடற்படை விசாரணை குழுவை அமைக்கும்.
“இறந்தவர்களின் குடும்பங்களின் உணர்வுகள் மற்றும் விசாரணை செயல்முறையின் பொருட்டு, சம்பவத்தின் வீடியோக்களைப் பரப்ப வேண்டாம் என்று கடற்படை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது,” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு ஹெலிகாப்டர்களும் நடுவானில் மோதித் தரையில் விழும் முன் நிகழ்ந்த பயங்கரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விபத்தைத் தொடர்ந்து, HOM (M503-3) ஹெலிகாப்டர் கடற்படை மைதானத்தின் படிக்கட்டுமீது விழுந்தது, மற்ற ஹெலிகாப்டர் கடற்படை விளையாட்டு வளாகத்தின் நீச்சல் குளத்திற்கு அருகில் முடிந்தது.
சோகம் ஏற்படுவதற்கு முன், இரண்டு விமானங்களும் சித்தியவான் களத்திலிருந்து காலை 9.03 மணிக்குப் புறப்பட்டுவிட்டன.