தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப உயர்கல்வி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார் – உயர்கல்வி அமைச்சர்

புத்ராஜெயா உயர்கல்வித் துறைக்கான அடுத்த 10 ஆண்டுத் திட்டத்தின் கீழ் மலேசியாவின் மூன்றாம் நிலைக் கல்வி முறை சீர்திருத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் ஜம்ப்ரி அப்துல் காதிர் கூறுகிறார்.

தற்போதைய உயர்கல்வி திட்டம் அடுத்த ஆண்டு முடிவடைவதால், தற்போதைய முறையை மறுபரிசீலனை செய்யப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜாம்ப்ரி கூறினார்.

தொழில்நுட்பம், குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்றவாறு உயர்கல்வி முறையும் இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார் என்றார்.

“எனவே, 2026 இல் தொடங்கும் அடுத்த உயர் கல்வித் திட்டத்தின் மூலம் உயர்கல்வியை (அமைப்பு) சீர்திருத்துவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்”.

சைபர்ஜெயாவில் உள்ள லிம்கோக்விங் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்றைய போட்டி உலகில் நாம் போட்டியிடுவதை உறுதிசெய்யத் தற்போதைய முன்னேற்றங்களை நாடு பின்பற்ற வேண்டும்”.

இதற்கிடையில், ஈராக் மற்றும் லெபனான் உட்பட 100,000 வெளிநாட்டு மூன்றாம் நிலை மாணவர்களைச் சேர்க்க நாடு திட்டமிட்டுள்ளது. மலேசியாவில் தற்போது சுமார் 200,000 வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர்.

“வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து இங்குப் படிக்க அதிக தேவை உள்ளது என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகள் தங்கள் நாடுகளை மீண்டும் அபிவிருத்தி செய்ய அதிக மனித மூலதனம் தேவை”.

நான் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஆயிரக்கணக்கான மாணவர்களை இங்கு அனுப்ப வேண்டும் என்று குரல் கொடுத்தனர் என்று  ஜாம்ப்ரி கூறினார்

-fmt