மலேசியாவின் கல்வித்தரம் கவலை அளிக்கிறது- உலக வங்கியின் அறிக்கை  

நாட்டின் கல்வி முறையானது சந்தை தேவைகளுக்கு ஏற்ப திறமையான மற்றும் செயல் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ரபிடா அஜீஸ் கூறினார்.

நாட்டின் கல்வித் தரம் குறித்து கவலையளிக்கும் படத்தை வரைந்துள்ள உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையை அடுத்து, கல்வித்துறையில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரபிடாதா அஜீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

“வளைந்து கொடுக்கும் மூங்கில் தளிர்களும்-உறுதியான அடித்தளத் திறன்களும்ல்” என்ற தலைப்பிலான அறிக்கை, மலேசிய மாணவர்கள் சராசரியாக 12.5 ஆண்டுகள் பள்ளியில் கல்வி கற்றாலும் அவர்களின் தரம் 8.9 ஆண்டுகளுக்கு சமமான கல்வி தரத்தில்தான் உள்ளது.

5 ஆம் வகுப்பு முடிவதற்குள் 42% மலேசிய மாணவர்கள் வாசிப்புத் திறனை அடையத் தவறிவிட்டனர்,  இது தனிநபர் மொத்த தேசிய வருமானம் (34%) உள்ள மற்ற நாடுகளை விட அதிகமாகும்.

FMTக்கு அளித்த அறிக்கையில், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறினால், போட்டித்திறன் மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாடு போன்ற முக்கியமான அம்சங்களில் மலேசியா “மிகவும்  பின்தங்கிவிடும்” என்று ரபிடா கூறினார்.

“கல்வி கொள்கைகள், கட்டமைப்பு, அமைப்பு, உள்ளடக்கம் மற்றும் விநியோகம் போன்ற பல்வேறு துறைகளில் உடனடி சீர்திருத்தம் தேவை,” என்று அவர் கூறினார்.

“இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தின் பணியாளர்கள். எனவே, பொருளாதார மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழலுக்குத் தேவையான கல்வி, பயிற்சி மற்றும் திறன்களை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

“ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் பயிற்சி மிகவும் முக்கியமானது,  மேலும் (பாடங்கள்) தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத் துறையின் கோரிக்கைகளுடன் ஒத்துப்போக வேண்டும்.”

நாட்டின் கல்வி அமைப்பு சந்தை தேவைகளுக்கு ஏற்ப திறமையான பணியாளர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட உலக வங்கி அறிக்கையில் காணும் நம் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய கல்வி மற்றும் கல்வித் துறையில் நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் மூளைச்சலவை அமர்வுகள் மற்றும் சந்திப்புகளை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று ரபிடா பரிந்துரைத்தார்.

ஹாங்காங், சீனா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன்  ஒப்பிடுகையில், மலேசியாவில் கல்வி கற்ற ஒரு 15 வயது மாணவரின் வாசிப்பு, அறிவியல் மற்றும் கணித திறன்கள் “வெகுவாக பின்தங்கியிருக்கிறது” என்று அறிக்கை கூறுகிறது.

“அதோடு   மலேசியா கல்விக்காகச் செலவிடுவதில் ஒரு பகுதியைமட்டுமே  செலவிடும் வியட்நாமில் உள்ள தனது சகாக்களை விடக் குறைவாகவே செயல்படுகிறதுது,” என்று அது கூறியது.

தரமான ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்விக்கான வரையறுக்கப்பட்ட அணுகலைத் தவிர, ஆசிரியர் தயார்நிலை மற்றும் வலுவான செயல்திறன் கண்காணிப்பு அமைப்புகளின் பற்றாக்குறை ஆகியவை மலேசியாவில் காணப்படும் மோசமான கல்வி விளைவுகளுக்கு பங்களிக்கும் பிற சிக்கல்களாகும் என்று உலக வங்கி குறிப்பிட்டது.

இது பாலர் கல்வியின் அணுகல் மற்றும் தரத்தை விரிவுபடுத்துதல், தரப்படுத்தப்பட்ட கற்றல் மதிப்பீடுகளை செயல்படுத்துதல் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான தற்போதைய தொழில்முறை மேம்பாட்டை வழங்குதல் ஆகியவற்றை முன்மொழிந்தது.