புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய துறைகளில் சவுதி அரேபியாவுடன் ஒத்துழைக்கும் புதிய முனைபுகளை ஆராய மலேசியா தயாராக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.
நிதி அமைச்சராக இருக்கும் அன்வார், அதிக மதிப்புள்ள திட்டங்களில் சாத்தியமான முதலீடுகளை ஆராய சவுதி அரேபிய நிறுவனங்களை மலேசியாவிற்கு வரவேற்றார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நேற்று முடிவடைந்த உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், ரியாத்தில் உள்ள யமாமா அரண்மனையில் சவுதி இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடனான சந்திப்பைத் தொடர்ந்து அன்வார் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“ இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை பற்றி பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“இலக்கவியல் மற்றும் பசுமை பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, சுத்தமான ஆற்றல், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் மின்னணுவியல் மற்றும் விண்வெளி போன்ற உயர் மதிப்பு திட்டங்களில் சாத்தியமான முதலீடுகளை ஆராய சவுதி அரேபியாவில் இருந்து மலேசியாவிற்கு முதலீட்டாளர்களை நான் வரவேற்கிறேன்,” என்று அவர் எக்ஸ் தள ஒரு பதிவில் கூறினார். .
ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்-சீனா உச்சிமாநாட்டை நடத்துவது உட்பட, அடுத்த ஆண்டு ஆசியான் தலைவராக மலேசியா தயாராக இருப்பதாகவும், “இந்தப் பயணம் மலேசியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் மேம்படுத்தியுள்ளது மற்றும் கடவுள் விரும்பினால் மலேசியர்களின் செழிப்புக்கு பங்களிக்கும் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளைத் திறக்க வாய்ப்புள்ளது” என்று அன்வார் கூறினார்.
-fmt