இராகவன் கருப்பையா – இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை செம்மைப்படுத்தும் முயற்சியிலான இசை நிகழ்ச்சியொன்று நாளை, மே 4ஆம் தேதி சனிக்கிழமை தலைநகரில் நடைபெறவுள்ளது.
தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க கட்டிடத்தின் சோமா அரங்கில் மாலை 7 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியை ‘பரமேஷ் புரோடக்க்ஷன்’ எனும் தனது நிறுவனம் ஏற்று நடத்தவிருப்பதாக அதன் தோற்றுனர் குமாரி பரமேஷ் கூறினார்.
நாடு தழுவிய நிலையில் உள்ள கலைஞர்களின் ஆதரவோடு இசைத்துறையில் தன்னைத்தானே செம்மைப்படுத்திக் கொண்டுள்ள அவர், வளர்ந்து வரும் அதிகமான இளம் கலைஞர்களை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.
இளையோரிடையே ஒளிந்திருக்கும் ஆடல் பாடல் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு ஒரு அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்நிகழ்ச்சியின் தலையாய நோக்கம் என்றார் அவர்.
காண வருபவர்களை இந்நிகழ்ச்சி கண்டிப்பாகக் கவரும் என்று உறுதி கூறும் பரமேஷ் அதற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கி இளம் கலைஞர்களை ஊக்கமளிக்க உதவுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டார்.
உணவுகளுடன் கூடிய இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டு ஒன்றின் விலை 50 ரிங்கிட் மட்டுமே. பரமேசை 017-6754612 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.