ஒரு பயணியிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட வீடியோ வைரலில் சிக்கிய பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் ( Land Public Transport Agency) தெரிவித்துள்ளது.
இது மீண்டும் நிகழாமல் தடுக்க, அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு இதுகுறித்து மேலும் விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று நேற்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நிறுவனம் பஸ் சாரதியின் கடமைகளை இடைநிறுத்தியுள்ளது மற்றும் அது மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகச் சம்பவம்குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு Apad நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது,” என்று அது கூறியது.
50 வினாடிகள் நீளும் அந்த வீடியோவில், வீடியோ எடுத்த பயணியிடம் பேருந்து ஓட்டுநர் கூச்சலிடுவதைக் காணலாம்.
அவர் பயணியிடம் பதிவு செய்யப்படுவதற்கு பயப்படவில்லை என்றும், காவல்துறையில் புகார் அளிக்குமாறும் கூறினார்.
அப்போது டிரைவர் பஸ்சை நிறுத்தி, பயணியை வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கினார்.
தொழில்முறையாக இருங்கள்
இந்தச் சம்பவம் ஜொகூரில் நடந்துள்ளது. பஸ் டிரைவருக்கும், பயணிக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணம் தெரியவில்லை.
மற்ற சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தங்கள் வாகன ஓட்டுநர்களின் செயல்திறனைக் கண்காணிக்குமாறு நிறுவனங்களுக்கு Apad மேலும் நினைவூட்டியது.
“அனைத்து ஆபரேட்டர்கள் மற்றும் சர்வீஸ் டிரைவர்கள் எப்போதும் தொழில்முறை மற்றும் மரியாதையான பணி நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று Apad எச்சரிக்கிறது.
“எந்தவொரு முறையற்ற சேவையும் அமல்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்,” என்று அது கூறியது.
மேலும், விசாரணைகள் முடியும் வரை பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம்குறித்து மேலும் ஊகிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பான எந்தவொரு புகார்களையும் நிறுவனம் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ புகார் சேனல்கள்மூலம் கொண்டு வர முடியும் என்று அது மேலும் கூறியது.