முன்னாள் தேசிய மற்றும் ஜொகூர் தாருல் தாசிம் (Johor Darul Ta’zim) தலைவர் சஃபிக் ரஹீம் நேற்று இரவு ஒரு வாரத்தில் தாக்கப்பட்ட மூன்றாவது தேசிய கால்பந்து வீரர் ஆனார்.
ஜாலான் ஸ்ரீ கெலாம், ஜொகூர் பாருவில் ஹோண்டா சிவிக் காரை ஓட்டிச் சென்ற சஃபிக், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்களால் தடுக்கப்பட்டார், அவர்களில் ஒருவர் அவரது பின்புற கண்ணாடியை உடைக்க ஒரு சுத்தியலைப் பயன்படுத்தினார்.
லார்கின் காவல்நிலையத்தில் சஃபிக் அளித்த போலீஸ் புகாரின்படி, நேற்று இரவு 10.05 மணியளவில் கால்பந்தாட்ட வீரர் ஸ்ரீ கெலமில் உள்ள ஜேடிடியின் பயிற்சி மையத்திற்கு தனது காரை ஓட்டிக்கொண்டு பந்தாய் லிடோவுக்குச் செல்லும்போது இந்தச் சம்பவம் நடந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தனது காரை நெருங்கி வந்ததாகவும், அவர்களில் ஒருவர் தனது முன்பக்க கண்ணாடியைச் சுத்தியலால் தாக்கியதாகவும், இதனால் அது உடைந்து விட்டதாகவும் அவர் கூறினார்.
“நான் அதிர்ச்சியடைந்தேன், உடனடியாகக் காரை நிறுத்தினேன். இருவரும் என் காரின் முன் நிறுத்திச் சுத்தியலைக் காட்டினார்கள். நான் விரைவாகத் திரும்பினேன்”.
“அவர்கள் விரைவில் வெளியேறினர், கண்ணாடியை உடைந்ததால், நான் போலீசில் புகார் செய்தேன்,” என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை, சிலாங்கூரில் உள்ள கோத்தா டாமன்சாராவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரண்டு ஆசாமிகள் தேசிய ஸ்ட்ரைக்கர் பைசல் ஹலிம் மீது ஆசிட் வீசினர். நான்காம் நிலை தீக்காயங்களுக்கு உள்ளான அவருக்குத் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த வியாழன் அன்று, திரங்கானு எஃப்சியில் இருக்கும் மற்றொரு தேசிய வீரர் முகம்மது அக்யார் அப்துல் ரஷித், குவாலா திரங்கானுவில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார்.
மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டதில் தலையிலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.