மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் அடுத்த 2 மாதங்களுக்குள் தெரெங்கானுவில் கடும் வறுமை ஒழிக்கப்படும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மே 2 ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 1,663 குடும்பங்கள் கொடிய வறுமையில் உள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிதியமைச்சராக இருக்கும் அன்வார், இரண்டு மாத காலத்தில் தீவிர வறுமையை ஒழிக்க முடியும் என்பதை உறுதிசெய்ய, பாஸ் தலைமையிலான தெரெங்கானு அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுமாறு மத்திய அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
“அனைத்து நிறுவனங்களும், அமைச்சுகளும் வளம் பெற்றிருந்தும், அவர்களால் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்க முடியவில்லை என்று நீங்கள் என்னிடம் சொல்லவில்லையா? இக்குடும்பங்களுக்கு உண்பதற்கு உணவு இல்லை, பிள்ளைகளுக்கு புதிய ஆடை இல்லை, பாடசாலை சீருடை இல்லை.”
மத்திய, மாநில அரசுகள் முழுமையாக ஒத்துழைத்தால் இங்கு வறுமையை ஒழிக்க முடியும் என கோலா நேரேஸ், தெரங்கானுவில் இன்று நடைபெற்ற மதானி நோன்பு தின நிகழ்வில் அவர் பேசியுள்ளார்.நிகழ்ச்சியில் அன்வாருடன் தெரெங்கானு அமைச்சர் பெசார் அகமது சம்சூரி மொக்தார் உடன் இருந்தார்.
பாஸ் ஆட்சியில் உள்ளதால், மத்திய அரசு மாநிலத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்ற கூற்றுக்களை நிராகரிக்குமாறு தெரங்கானு மக்களை அன்வார் வலியுறுத்தினார்.புத்ராஜெயா மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.
மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறுவதை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
fmt