குடிவரவுத் துறை வெளிநாட்டு பாஸ்போர்ட் மோசடி கும்பலை முறியடித்தது

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாஸ்போர்ட்டுகளை மோசடி செய்வதில் ஈடுபட்ட “ஓபு பாய்” சிண்டிகேட்டை குடிநுழைவுத் துறை கண்டுபிடித்துள்ளது.

மே 10 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில் சிலாங்கூர், காஜாங்கில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும், இதன் விளைவாக “ஓஃபு பாய்” என்று அழைக்கப்படும் 38 வயதான பங்களாதேஷ் தலைவன் கைது செய்யப்பட்டதாகவும் அதன் இயக்குநர் ஜெனரல் ருஸ்லின் ஜுசோ தெரிவித்தார்.

அவரது 40 வயதான பிலிப்பைன்ஸ் கூட்டாளியும் கைது செய்யப்பட்டார்.

ஒரு ஆவணத்திற்கு ரிம 1,000 முதல் ரிம 1,500 வரை கட்டணத்தில் காலாவதியான பாஸ்போர்ட்டுகளை போலியாக்கும் சேவைகளைச் சிண்டிகேட் வழங்குவதாக அவர் கூறினார்.

“இது ஒரு புதிய தந்திரம்… காலாவதி தேதி தகவலை மட்டும் திருத்துவதன் மூலம் காலாவதியான பாஸ்போர்ட்டுகளை சிண்டிகேட் பொய்யாக்கியது. அதிகாரிகளைத் தவறாக வழிநடத்த, அசல் உரிமையாளரின் தகவல்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“சிண்டிகேட் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ரிம 600 முதல் ரிம 1,000 வரை கட்டணத்துடன் வெளிநாட்டு பணியாளர்களின் மருத்துவ பரிசோதனை கண்காணிப்பு முகமையின் (Fomena) ஒப்புதலைப் பெற பாஸ்போர்ட்டில் உள்ள தவறான தகவலைப் பயன்படுத்தும்.”

குடிவரவு இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ

இந்தச் சோதனையில் ஒரு கணினி, 199 பங்களாதேஷ், நான்கு இந்திய, மூன்று பிலிப்பைன்ஸ், மூன்று மியான்மர் மற்றும் இரண்டு இந்தோனேசிய கடவுச்சீட்டுகள் அடங்கிய 211 பாஸ்போர்ட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் 31 பாஸ்போர்ட் பயோடேட்டா அட்டைகள், 144 ஃபோமேமா ஆவணங்கள், போலி ஆவணங்களை உருவாக்குவதற்கான பல்வேறு உபகரணங்கள் மற்றும் ரொக்கமாக ரிம 16,000 ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

“முதற்கட்ட சோதனையில், மோசடித்தலைவன் பயண ஆவணங்கள் அல்லது மலேசியாவில் இருப்பதற்கான செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இல்லை என்பதும், அவரது கூட்டாளி பெண் அதிக காலம் தங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது”.

“இந்தச் சிண்டிகேட்டிற்கு வெளியில் வேறு நெட்வொர்க்குகள் இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். பெரும்பாலான சிண்டிகேட் பரிவர்த்தனைகள் ஆன்லைனில் நடப்பது எங்களுக்குத் தெரியும்,” என்றார்.

குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 55D இன் கீழ் மேலதிக விசாரணைக்காக இரண்டு சந்தேக நபர்களும் புத்ராஜெயா குடிவரவு டிப்போவில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஸ்லின் மேலும் கூறினார்.