நாடு முழுவதும் கிளினிக்குகளை மேம்படுத்தவும், சுகாதார வசதிகளை வலுப்படுத்தவும் மொத்தம் 401 திட்டங்கள் இந்த ஆண்டு செயல்பாட்டில் உள்ளன என்று சுகாதார அமைச்சர் துசுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரிம 150 மில்லியன் என அவர் மேலும் கூறினார்.
சபாவில் மட்டும், ரிம 21.5 மில்லியன் செலவில் 55 திட்டங்கள் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“இந்தத் திட்டங்களை விரைவில் முடிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று துசுல்கேப்ளி நேற்று சபா, கோத்தாகின்னபாலுவில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மலேசியா சபா பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான உலக மலேரியா, காசநோய் மற்றும் தொழுநோய் தின நிகழ்வைத் தொடங்கி வைத்து அவர் பேசினார்.
சபா சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் அசிட்ஸ் சன்னாவும் உடனிருந்தார்.
சபாவில் சுகாதார அமைச்சின் கீழ் மூன்று “முழுமையடையாத” திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் துசுல்கேப்ளி கூறினார். குடாத்தில் சிகுவாட்டி ஹெல்த் கிளினிக் கட்டுமானம், அத்துடன் பாப்பர் மருத்துவமனை மற்றும் தம்புனன் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் மேம்படுத்தும் பணிகள்.