ஊனமுற்ற ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஜொகூர் ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், எந்தவொரு சட்ட விரோத நடவடிக்கையையும் அல்லது யாரையும் மிரட்டுவதை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன் என்று வலியுறுத்தினார்.
“மே 28 அன்று கோலாலம்பூரில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் நடந்த சம்பவம்குறித்து, மறுநாள் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாகப் போலீஸ் பாதுகாப்புப் படையினரை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு வலியுறுத்தினேன்”.
“எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையையும் அச்சுறுத்தலையும் நான் மன்னிக்கவில்லை. காவல்துறை அதிகாரி ஒருவர் தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம்குறித்து முழுமையாக விசாரிக்குமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்”.
“அதிகாரிகள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்துப் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் X இல் கூறினார்.