குளுவாங் அருகே உள்ள பழத்தோட்டத்தில் 4 யானைகள் இறந்து கிடந்தன

கஹாங் தீமோரில்  உள்ள ஒரு பழத்தோட்டத்தில் இன்று நான்கு யானைகள் இறந்து கிடந்தன.

ஜொகூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையானது ஒரு யானை மற்றும் மூன்று ஆண் கன்றுகள் சம்பந்தப்பட்ட சம்பவத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.

“வனவிலங்கு துறை  தற்போது விசாரித்து வருகிறது. மேலதிக ஆய்வுக்காக யானைகளின் சடலங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

“இறப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. இறந்த யானைகளின் உடல்கள் அனைத்தும் அங்கேயே அடக்கம் செய்யப்படும்” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுயமாக விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளாமல், வன விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏதேனும் சிக்கல் /மோதல்கள் ஏற்பட்டால் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு லிங் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, ஒரு தோட்டத்தில் இறந்து கிடந்த நான்கு யானைகளின் பல படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.

ஜொகூர் பெர்ஹிலிட்டன் இயக்குனரான அமினுடின் ஜாமினை தொடர்பு கொண்டபோது, ​​இறப்புக்கான காரணத்தை கண்டறிய விலங்குகளின் முழுமையான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த யானைகள் விஷம் கலந்ததால் இறந்ததா அல்லது வேறு காரணங்களால் இறந்ததா என்பதை இதுவரை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஏப்ரல் 13 அன்று, பெர்ஹிலிந்த்தான் தலைவர் அப்துல் காதர் அபு ஹாஷிம், கஹாங்-ஜெமலுவாங், கோந்த்தா திங்கி-மெர்சிங் மற்றும் குளுவாங்-கோத்தா திங்கி  சாலைகளில் ஜொகூர் உட்பட நாடு முழுவதும் யானைகள் கடக்கும் இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறினார்.

 

 

-fmt