வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சிறுவன் – விசாரணை எங்கே?

மனித உரிமைகள் ஆணையம் தனது சுய விசாரணையைத் தொடங்கலாம் என்று கூறுகிறார் ஜேம்ஸ் நாயகம், அதோடு குடும்பத்தினரை  புகார் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

முன்னதாக கோலாலம்பூரில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் 11 வயது சிறுவன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான வெயிலில் நிற்கும்படி ஆசிரியரால் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து வெப்பப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் படங்கள் காட்டப்பட்டன.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வெயிலில் நிற்க வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு, அந்த ப்பள்ளி மாணவன் வெப்ப பக்க வாதாத்தால் பாதிப்புக்கு உள்ளானான்..

குழந்தை உரிமை ஆர்வலர் ஜேம்ஸ் நாயகம், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு குடும்பத்தினர் புகார் அளிக்க சுஹாகம் காத்திருக்க வேண்டியதில்லை என்றார்.

“சுயாதீனமாக, விசாரணை நடத்த சுஹாகாம், காத்திருக்க வேண்டியதில்லை. இது போன்ற ஒரு சம்பவம் பொது நலன் சார்ந்தது, மலேசியாவில் இப்படி ஒரு சம்பவம் எப்படி நடக்க இயலும் என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர்.

“அது நானாக இருந்தால், நான் நிச்சயமாக விசாரிப்பேன்,” என்று அவர்  கூறினார்.

ஜேம்ஸ் நாயகம்.

கமிஷன் விசாரணையைத் தொடங்குவதை உறுதி செய்வதற்காக சுஹாகாமிடம் உத்தியோகபூர்வ புகார் அளிக்குமாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு நாயகம் அறிவுறுத்தினார். போலீஸ் விசாரணைக்கு இணையாக சுஹாகாம் விசாரணை நடத்த முடியும் என்றார்.

கமிஷன் ஒரு சீரான விசாரணையை மேற்கொள்ளும், இதுபோன்ற விசாரணைகளை நடத்துவதில் ஏராளமான அனுபவம் இருப்பதாகக் கூறினார். அதன் கண்டுபிடிப்புகள் நீதிமன்றத்திலும் பயன்படுத்தப்படலாம், என்றார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, சிறுவன் ஏப்ரல் 30 அன்று அம்பாங்கில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தின் நடுவில் சூரியனுக்கு அடியில் நிற்க வைக்கப்பட்டார். இதன் விளைவாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது, மேலும் அவர் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த 5 ஆம் ஆண்டு மாணவனை மாற்றுத்திறனாளி (OKU) ஏன்ற நிலைக்கு உள்ளானான்  என மருத்துவமனை மதிப்பிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். “நரம்பு நிலைபாதிப்பு ” காரணமாக அவரால் பள்ளிக்கு திரும்ப முடியவில்லை என்று அவர்கள் கூறினர், இது வெப்ப பக்கவாதத்தின் விளைவாக எழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை முடித்துள்ள போலீசார், விசாரணை ஆவணங்களை அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பள்ளி மீது வழக்கு தொடர குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

அதன் செய்தித் தொடர்பாளர் எஸ் தயாளன் கூறுகையில், சுஹாகாமுடன் இன்னும் ஈடுபடும் திட்டம் இல்லை. தற்போது போலீஸ் விசாரணை முடிவு குறித்து கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.