சிறார்களை இஸ்லாத்திற்கு மாற்றும் இரகசிய திட்டம் ஒழுக்கக்கேடானது, சட்டவிரோதமானது

பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் மலேசிய ஆலோசனைக் குழு, மத  போதகர் பிர்டாவுஸ் வோங் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சர்ச்சைக்குரிய மதபோதகர் பிர்டாவுஸ் வோங் (படம்), டிக்டோக்கில் பதிவேற்றிய வீடியோ, இஸ்லாம் மதத்திற்கு மாறுவது குறித்த மாணவர்களின் கோரிக்கைகளைக் கையாள ஒருவருக்கு வழிகாட்டி என்று கூறப்படுகிறது.

பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் மலேசிய ஆலோசனைக் குழு (MCCBCHST) சிறார்களை இஸ்லாத்திற்கு மாற்றும் “ஒழுக்கமற்ற மற்றும் சட்டவிரோதத் திட்டத்தால்” திகைப்படைந்ததாகக் கூறுகிறது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கவுன்சில் TikTok இல் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவைக் குறிப்பிட்டுள்ளது, அதில் மதபோதகர் வோங், இஸ்லாத்திற்கு மாற விரும்பும் பதின்ம வயதினரின் கோரிக்கைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒரு நபருக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

“சிறுவர்களை மாற்றும் இந்தத் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டு, வோங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

“சிறார்களை இஸ்லாத்திற்கு மாற்றும் இந்த ஒழுக்கக்கேடான, அரசியலமைப்பிற்கு விரோதமான மற்றும் சட்டவிரோத திட்டம் கூட்டாட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை சுதந்திரங்களுக்கு எதிரானது” என்று கவுன்சில் கூறியது, ஒரு குழந்தையின் மதம் அவரது பெற்றோரின் முடிவு என்று அரசியலமைப்பு கூறுகிறது.

பெற்றோரின் ஒப்புதல் பெறப்படாததால், மதமாற்றத்தின் போது பேசப்படும் “கலிமா ஷஹாதா” என்ற வார்த்தையைச் சொல்ல ஒரு குழந்தையை ஊக்குவிப்பது, பிரிவு 12(4)ஐ மீறுவதாகும் என்று கவுன்சில் கூறியது.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 12(4), 18 வயதுக்குட்பட்ட ஒருவரின் மதத்தை அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்று கூறுகிறது.

“எந்த  ஒரு பெற்றோரும் தங்கள் குழந்தை ரகசியமாக மத மாற்றம்  செய்யபப்ட்டது என்று அறிந்தால் கடுமையான வேதனைக்கு  ஆளாவார்கள்.”

“பள்ளிகள் அறிவாற்றலை கொடுக்கும் இடங்கள், ஆனால் அவை  சிறார்களை மத மாற்றும் இடமாக மாறினால் அவை இனி நம் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான இடம் இல்லை என்றாகிவிடும்” என்று கவுன்சில் கூறியது.

-FMT