சிங்கப்பூர் ஆசிரியர்களை அரசாங்கம் நியமிக்கவில்லை, ‘தன்னார்வலர்கள்’ மட்டுமே – அன்வார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஆங்கிலம் அல்லது பிற பாடங்களைக் கற்பிக்க சிங்கப்பூர் ஆசிரியர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான தனது திட்டத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அன்வார் தனது சிங்கப்பூர் துணைத்தலைவர் லாரன்ஸ் வோங்குடனான கலந்துரையாடல், நகர்ப்புற ஏழைப் பகுதிகளிலும், சபா மற்றும் சரவாக்கின் உட்புறங்களிலும் ஆங்கிலம் கற்பிக்க “தன்னார்வலர்களை” அனுப்புவதன் மூலம் ஒரு “உதவித் திட்டத்தை” உருவாக்க முடியும் என்று விளக்கினார்.

“சிங்கப்பூரிலிருந்து ஆங்கில ஆசிரியர்களை வரவழைத்து நியமிப்பதற்காக அல்ல. தன்னார்வலர்களுக்குச் சிங்கப்பூர் அரசால் ஊதியம் வழங்கப்படும்”.

“நான் மற்ற நாடுகளுடன் சிறந்த உறவுகளை உருவாக்க விரும்புகிறேன். எங்கள் முக்கியமான அண்டை நாடுகளான தாய்லாந்து, சிங்கப்பூர், புருனே மற்றும் இந்தோனேசியாவுடன் நாங்கள் நன்றாக இருக்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற “Himpunan Aspirasi Madani Rakan Pembimbing Perkhidmatan Awam” நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.