கெரியனில் உள்ள இடைநிலைப் பள்ளி மாணவி ஒருவர் கழிவறையில் கொடுமைப்படுத்தப்பட்டதைக் காட்டும் சமீபத்திய வைரலான வீடியோவைக் போலிஸ் விசாரித்து வருகின்றனர் என்று பேராக் காவல்துறைத் தலைவர் முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.
13 வயதுடைய பள்ளி மாணவி ஒருவரிடமிருந்து இன்று இந்த வழக்குகுறித்து காவல்துறைக்கு புகார் வந்ததாக அவர் கூறினார்.
“ஜூன் 14 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், பாதிக்கப்பட்டவர் படிவம் ஒன்று மாணவர் என்றும், 15 வயதுடைய இரண்டு பள்ளி மாணவிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது”.
“இரு சந்தேக நபர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கழிப்பறைக்கு அழைத்து வந்து வீடியோ பதிவு செய்யும்போது பலமுறை அறைந்தனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கொடுமைப்படுத்துதல் சம்பவம் பாதிக்கப்பட்டவர்மீது பொறாமையின் விளைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது, அவர் சந்தேக நபர்களில் ஒருவரின் காதலனுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
“சந்தேக நபரின் காதலன், 15, அதே பள்ளியில் படிக்கும் மாணவன். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட இந்த வழக்குக்கான விசாரணைகள் நடந்து வருகின்றன”.
“வீடியோவை ஊகிக்க வேண்டாம் என்றும், அது தொடர்பான எந்தத் தகவலையும் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது கெரியன் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு 05-7212222 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.