கடந்த மாதம் ஓய்வு பெற்ற அப்துல் கானி சாலேவுக்குப் பிறகு இன்று முதல் தேர்தல் ஆணையத் தலைவராக ரம்லான் ஹாருன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததாக தலைமைச் செயலாளர் ஜூகி அலி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து 25 வருடங்களுக்கும் மேலாக அரச சேவையில் ஈடுபட்டு வருகின்றார் ரம்லான்.
ரம்லான் ஹாருன் மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தில் நில வள மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
-fmt