250 மில்லியன் ரிங்கிட் பினாங்கு மலை கேபிள் கார் திட்டத்தை மேற்கொள்பவர்கள், மாநிலத்தின் முதன்மையான மலை பொழுது போக்கு இடத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அம்சங்களைப் பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கேபிள் கார் அமைப்புகள் பொதுவாக சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்றும், மலை உல்லாச விடுதிகளுக்கு நிலையான போக்குவரத்து முறை என்றும் அவர் கூறினார்.