ஆறு முன்னாள் பெர்சத்து எம்பி-க்களின் தலைகள் தப்பின

நாடாளுமன்ற உறுப்பினர் தகுதிகள்  கேள்விக்குறியாக இருந்த ஆறு முன்னாள் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளை தக்க வைத்துக் கொள்வார்கள்.

டேவான் ரக்யாட் சபாநாயகர் ஜோஹாரி அப்துல் நேற்று இந்த முடிவை எடுத்ததாக கட்சியின் தலைவர் முகைதின் யாசின் உறுதிப்படுத்தினார்.

எதிர்க்கட்சி என்ற கட்சியின் நிலைப்பாட்டை மீறி, பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆறு எம்.பி.க்களும் ஆதரவளிப்பதாக முன்னதாக அறிவித்தனர்.

அவர்கள் சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் பசல் (புக்கிட் கன்டாங்), ஜஹாரி கெச்சிக் (ஜெலி), முகமது அசிசி அபு நைம் (குவா முசாங்), இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித் (குவாலா கங்சார்), சுஹைலி அப்துல் ரஹ்மான் (லாபுவான்) மற்றும் டாக்டர் ஜுல்கபேரிஜோங் கராங்) ஆவர்.

இதைத் தொடர்ந்து, கட்சிக்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பிரதிநிதிகளும் தங்கள் உறுப்பினர் பதவியை இழந்ததாகக் கருதப்படும் வகையில், பெர்சத்து தனது கட்சி விதிகளை மாற்றம் செய்தது.

பெர்சத்து தலைவர் முஹிதின் யாசின்

இது கோட்பாட்டளவில், தங்கள் கட்சிகளை விட்டு வெளியேறும் அல்லது மற்றொன்றில் சேரும் எம்.பி.க்களை தண்டிக்கும் கட்சி தாவல்  எதிர்ப்புச் சட்டத்தைத் மீறும்.

டிஏபியும் அம்னோவும் தங்கள் கட்சிகளில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.க்களை வெளியேறுவதை தடுக்க  கட்சித்தாவல்  தடுப்புச் சட்டத்தில் உள்ள ஒரு பிரிவைத் தவிர்ப்பதற்காக ஒரே மாதிரியான கட்சி விதிகளைக் கொண்டுள்ளன.

ஆறு முன்னாள் பெர்சாத்து எம்.பி.க்கள் கட்சி விதிகள் புதுப்பிக்கப்பட்ட பிறகும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை, இதனால் அவர்களது உறுப்பினர் பதவி பறிக்கப்பட வேண்டும்.

ஆனால், சபா நாயாகர் தனது முடிவில் அந்த ஆறு நபர்களும் இன்னமும் எதிர் கட்சியில்தான் உள்ளனர், எந்த கட்சிக்கும் தாவவில்லை என்ற அடிப்படையில் தனது முடிவை அறிவித்தார்.