காவல் நிலைய வாயில்கள் மூடல் : காவல் துறையினர் வழக்கம்போல் கடமைகளை நிறைவேற்றுவார்கள்

இரவு 10 மணிக்குப் பிறகு காவல் நிலையங்கள் வாயில்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டாலும், The Royal Malaysia Police வழக்கம்போல் சேவைகளை வழங்கும்.

அந்த நேரத்திற்குப் பிறகும் பொதுமக்கள் புகார்கள் மற்றும் அறிக்கைகளைக் காவல் நிலையங்களில் பதிவு செய்யலாம் என்று காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரஸாருதீன் ஹுசைன் கூறினார்.

“உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் வலியுறுத்தியது போல், பொது மக்கள் புகார் அளிக்கும் இடமாகக் காவல் நிலையத்தின் பங்கை நாம் சமநிலைப்படுத்த வேண்டும் ஆனால் அதே நேரத்தில், நிலையங்களும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகின்றன,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

இரவு 10 மணிக்குக் வாயில் மூடல் தற்போது தொலைதூர அல்லது கிராமப்புறங்களில் உள்ள காவல் நிலையங்களை உள்ளடக்கியதாக ரஸாருதீன் கூறினார்.

புக்கிட் அமான் மேலாண்மைத் துறையின் இயக்குநர் அஸ்மி காசிமிடம் இந்த விஷயத்தைப் பற்றிய நிலையான செயல்பாட்டு நடைமுறையை முன்வைத்தபிறகு, வாயில் மூடல்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி-பதில் அமர்வின்போது, ​​நாட்டில் உள்ள காவல் நிலையங்களின் வாயில்களை இரவு 10 மணிக்குப் பிறகு மூடுமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதாகச் சைபுதீன் கூறினார்.

ஜொகூரில் உள்ள உலு திராம் நிலையம்மீதான தாக்குதலைத் தொடர்ந்து இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்று கூறப்பட்டது.

காவல் நிலையத்தில் பொதுமக்களின் தேவையைச் சமநிலைப்படுத்தவும், பணியில் இருக்கும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் சிலர் குழப்பம் அடைந்ததைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், காவல் நிலையத்தின் வாயிலை மூடுவது என்பது முழுவதுமாக மூடுவது என்று அர்த்தமல்ல.

“பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு காவல்துறையினருக்கு இருக்கும் அதே வேளையில், இந்த அறிக்கையைச் சில தரப்பினர் ‘கேட்டை மூடுவது’ எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது நிச்சயமாக நியாயமானதல்ல,” என்று அமைச்சகம் கூறியது.

பிரச்சினையில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய செய்தி அறிக்கையை ஆசிரியர்கள் திருத்த வேண்டும் என்றார்.