பெல்டாவிற்கு கூடுதல் மானியமாக 1௦ கோடி ரிங்கிட் ஒதுக்கப்படும் – பிரதமர்

டீசலுக்கான  மானியங்கள் அகற்றப்படுவதால், பெருந்தோட்ட இயக்கச் செலவுகளை ஈடுகட்ட, பெல்டா நிறுவனத்திற்கு 1௦ கோடி ரிங்கிட் துணை மானியங்களை அரசாங்கம் ஒதுக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.

இன்று மலேசியா அக்ரோ எக்ஸ்போசிஷன் பார்க் செர்டாங்கில் பெல்டா  2024 கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த அன்வார், டீசல் விலை அதிகரிப்பால் பெல்டா நிறுவனம் ஆண்டுக்கு 12.16 கோடி ரிங்கிட் கூடுதல் நிதித் தாக்கங்களைச் சுமக்க உள்ளதாகக் கூறினார்.

மானிய விலை டீசல் கடத்தல் மற்றும் கசிவைச் சமாளிக்க அரசாங்கம் இலக்கு டீசல் மானியங்களை செயல்படுத்தியுள்ளது.

அதே சமயம், சிறுதொழில் செய்பவர்கள் உட்பட தேவைப்படும் இலக்குக் குழுக்களுக்கான உதவிகளை அரசாங்கம் தயார் செய்துள்ளது என்றார்.

அன்வார் தனது செஜஹ்தேரா கொமுனிதி மதனி திட்டத்தின் கீழ் 317 பெல்டா குடியேற்றங்களுக்கு 3.17 கோடி ரிங்கிட் அரசாங்கத்தின் ஒப்புதலையும் அறிவித்தார்.

“திட்டத்தில் ஃல்டாவின் ஈடுபாடு சமூக மட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகளை உயர்த்தியுள்ளது.

உணவு மற்றும் விவசாயம், தையல் வேலை மற்றும் கைவினைப் பொருட்கள் முதல் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் வரை தங்கள் கவனம் செலுத்தும் துறைகளைத் தீர்மானிக்க (பெல்டா) சமூகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

ஜூன் 10 முதல், தீபகற்ப மலேசியா முழுவதிலும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் டீசலின் சில்லறை விலையை லிட்டருக்கு 3.35 ரிங்கிட் என அரசாங்கம் நிர்ணயித்துள்ளது, அதே நேரத்தில் சபா, சரவாக் மற்றும் லாபுவானில் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாக இருக்கும்.

 

 

-fmt