தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு கட்டுப்படவில்லை PADU  – கோபிந்த் சிங் தியோ

துல்லியமான சமூக-பொருளாதார அளவீடுகளுடன் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக மலேசிய குடிமக்கள்பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் மத்திய தரவுத்தள மையம் (Padu), தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2024 (PDPA) க்கு கட்டுப்படவில்லை.

வணிகப் பரிவர்த்தனைகளில் தனிப்பட்ட தரவுகளின் செயலாக்கத்தை PDPA ஒழுங்குபடுத்துகிறது என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ விளக்கினார்.

எனவே, PADU, PDPA-வுக்கு கட்டுப்படுகிறதா என்று நீங்கள் கேட்டால், பதில் இல்லை, ஏனெனில் இந்தச் சட்டம் வணிக பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன், தனிநபர் தரவு பாதுகாப்பு (திருத்தம்) மசோதா 2024 மீதான விவாதத்தின்போது, ​​“அரசாங்க அளவிலான தரவுகளைக் கொண்ட PADU தொடர்பான கேள்விகளுக்கு இது பதிலளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

மலேசியாவின் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் சுயவிவரங்களை உள்ளடக்கிய PADU, ஒரு ஒருங்கிணைந்த தேசிய சமூக-பொருளாதார தரவுத்தளமாகும்.

மலேசியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் சமூக-பொருளாதார நிலையைப் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்கப் பல்வேறு அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் தரவை இது ஒருங்கிணைக்கிறது.

இருப்பினும், டாமன்சாரா எம்.பி.யான கோபிந்த், தரவுகளைக் கையாள்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கவில்லை என்று அர்த்தமல்ல என்று தெளிவுபடுத்தினார்.

உத்தியோகபூர்வ இரகசியச் சட்டம் 1972 மற்றும் அதிகாரிகள் மற்றும் பொது ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கைகள் போன்ற பிற சட்டங்கள் உள்ளன என்று அவர் விளக்கினார்.

PDPA திருத்த மசோதாவைப் பற்றி, தரவுக் கட்டுப்பாட்டாளர்கள் அல்லது தரவுச் செயலிகளால் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புக் கொள்கைகளை மீறுவதற்கான அபராதத் தொகையை ரிம 300,000 லிருந்து ரிம 1 மில்லியனாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாக அவர் எடுத்துரைத்தார்.

விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும், எதிர்காலத்தில் தரவுகளின் பயன்பாடு அதிகரித்து வருவதற்கும் PDPA மிகவும் முக்கியமானது என்று கோபிந்த் வலியுறுத்தினார்.