நூர் பராவை கொலை செய்ததாகப் போலீஸ்காரர்மீது குற்றம் சாட்டப்பட்டது

எண்ணெய் பனை தோட்டத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நூர் ஃபரா கர்தினி அப்துல்லாவை கொலை செய்ததாக இன்று கோலா குபு பஹாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு போலீஸ் அதிகாரிமீது குற்றம் சாட்டப்பட்டது.

26 வயதான முஹம்மது அலிஃப் மொன்ஜானி, ஜூலை 10 மற்றும் ஜூலை 15 க்கு இடையில் ஹுலு பெர்னாமின் கம்பங் ஸ்ரீ கெலேடாங்கில் உள்ள எண்ணெய் பனை தோட்டத்தில் Universiti Pendidikan Sultan Idris முன்னாள் மாணவி பராவை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

அவர்மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படி  ஆகியவற்றை விதிக்கிறது.

மாஜிஸ்திரேட் நுருல் மர்தியா முகமது ரெட்சா விசாரணைக்குத் தலைமை தாங்கினார்.