மக்களைப் பிளவு படுத்தும் அரசியல்வாதிகளை விமர்சிக்க வேண்டும் – கஸ்தூரி பட்டு

நல்லிணக்கத்தை அழித்து  மக்களைப் பிளவுபடுத்தும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு விமர்சிக்க இளைஞர்கள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்கிறார் கஸ்தூரி பட்டு.

இந்த தேசத்தின் எதிர்காலம் என்ற வகையில், இளைஞர்கள் சமாதானம் மற்றும் மாற்றத்தின் முகவர்களாக இருக்க வேண்டும் என்றும், இந்த உலகளாவிய விழுமியங்களை பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடம் கொண்டு சேர்க்க ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று, “இளைஞர்கள் அமைதிக்காகவா அல்லது…” என்ற தலைப்பில்நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்ட முன்னாள் பத்து கவான் எம்.பி கேட்டுக்கொண்டார்.

“நம்மை இணைப்பது உலகளாவிய மதிப்புகள் மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையாகும். மக்களைப் பிளவுபடுத்த முயலும் பொறுப்பற்ற அரசியல்வாதிகளை விமர்சிக்க இளைஞர்கள் பங்கு வகிக்க வேண்டும்.”

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை இப்போதே அழைத்து, அவர்கள் என்ன வகையான அரசியலை உங்கள் முன் கொண்டு வருகிறார்கள் என்று கேளுங்கள்.

உங்கள் இனம், பாலினம் அல்லது மதம் காரணமாக தாக்கப்படலாம் என்ற அச்சமின்றி, கேளுங்கள்.  பள்ளி பாடத்திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் உரையாடல்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குதல் ஆகியவை நமக்கு அத்தியவசியமானவை – இதைப்பற்றியும் கேட்க வேண்டும்.

கருத்து மோதல்கள் எப்பொழுதும் இருக்கும் அதே வேளையில், ஒற்றுமையை ஊக்குவிப்பவர்கள் தங்கள் வட்டங்களுக்கு வெளியே உள்ளவர்களுடன் ஆரோக்கியமான உரையாடல்களைத் தொடங்கவும், இனப் பிளவை மூடவும் ஒன்றிணைய வேண்டும் என்று கஸ்தூரி மேலும் கூறினார்.

இரண்டு முறைகள் பத்து கவான் எம்.பி-யான அவர்,  மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்திற்கான சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

“தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழி, பாலங்களைக் கட்டுவதும், கதவைத் தட்டுவதும் ஆகும், மக்களை ஒன்றிணைப்பதிலும், மத நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

FMT