நாட்டின் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

நாட்டின் வடக்கு எல்லையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த 10 கோடி ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

மலேசியாவின் வடக்கு மற்றும் தெற்கு தாய்லாந்தில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மலேசியா மற்றும் தாய்லாந்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, எல்லை தாண்டிய குற்றச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

நிதியமைச்சராக இருக்கும் அன்வார், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினை ஆகஸ்ட் 3 ஆம் தேதி சந்தித்து இரு நாடுகளுக்கும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதாக கூறினார்.

எல்லைப் பாதுகாப்பு மற்றும் தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக சுங்கை கோலோக் மற்றும் ரண்டௌ பஞ்சாங்கில் அவரைச் சந்திப்பேன்.

இதை எளிதாக்கும் வகையில், கெடா, கிளந்தான் மற்றும் பெர்லிஸ் எல்லைகளுக்கு 100 கோட் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளேன் என்று புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் தேசிய பாதுகாப்பு மாத தொடக்க விழாவில் தெரிவித்தார்.

எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் அன்வார் அறிவுறுத்தினார். எவ்வாறாயினும், பாதுகாப்பு சொத்துக்களை வாங்குவது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும் என்றும், கொள்முதல் செயல்முறை நேர்மையாகவும், செலவு குறைந்ததாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

மலேசியா மதானி கருத்து பலனைத் தந்துள்ளது என்றும், 2024 உலகளாவிய அமைதி குறியீட்டில் நாடு ஒன்பது இடங்கள் முன்னேறி, உலகின் பாதுகாப்பான 10 நாடுகளில் தரவரிசையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

மலேசியாவும் 2023 தேசிய பாதுகாப்பு குறியீட்டில் 1.48 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது, இது மிகவும் பாராட்டத்தக்க சாதனை என்று அவர் கூறினார்.

 

 

-fmt