ஷெரட்டன் நடவடிக்கை நாட்டுக்கு இழப்பு என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா

2020 பிப்ரவரியில் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு மூளையாக செயல்பட்ட அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் டிஏபி தலைவர் விமர்சித்துள்ளார்.

முன்னாள் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் சரிவு, ஷெரட்டன் நடவடிக்கை என்று இழிவான முறையில் பெயரிடப்பட்ட அரசியல் சூழ்ச்சியில், தேசத்தை விலைகொடுத்து, மலேசியர்களின் ஜனநாயக உரிமையை மறுத்துவிட்டது என்றார்.

“ஒரு சிறந்த மலேசியாவை கொண்டு வரும் நம்பிக்கையுடன் மக்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்தை மாற்ற வாக்களித்தனர், ஆனால் இந்த நம்பிக்கை அதிகார பேராசையால் சிதைக்கப்பட்டது.

அதிகாரத்தை விரும்பி தேசத்தைப் பற்றி சிந்திக்காதவர்களின் செயற்பாடுகள் அந்தத் தலைவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது என முன்னாள் பெர்சே தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இரண்டு சின்னமான பெர்சே பேரணிகளுக்கு தலைமை தாங்கிய மரியா, அரசியல் மாற்றம் தேவைப்பட்டால், அதை வாக்கெடுப்பு மூலம் செய்யுங்கள் அல்லது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுங்கள் என்று கூறி, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மறைமுக நகர்வுகளை முழு மனதுடன் ஏற்கவில்லை என்று கூறினார்.

அம்னோவை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதைத் தடுப்பதற்காக, மகாதீரைத் தலைவர் பதவியிலிருந்து விலக செய்ய நிர்ப்பந்திக்கும் நடவடிக்கையில், துணைப் பிரதம மந்திரியாகவும் இருக்கும் ஜாஹிட், சூத்திரதாரி என்று முன்பு கூறியிருந்தார்.

அப்போது மகாதீரிடம் இருந்து பிரதமராக பதவியேற்கவிருந்த அன்வார் இப்ராகிம், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த முகைதின் யாசின், அம்னோவின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.

மகாதீரின் ராஜினாமா மற்றும் அஸ்மின் அலியின் பிரிவு பிகேஆரில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பக்காத்தானில் இருந்து பெர்சத்து  விலகியது. முகைதின் பெர்சத்து பாரிசான் நேஷனல், அஸ்மின் பிரிவு மற்றும் பிறரைக் கொண்ட புதிய அரசாங்கத்தை அமைத்தார்.

பெயர் வெளியிட விரும்பாத டிஏபி தலைவர், ஒரு அரசியல் கட்சியின் நலன்களைப் பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பது வெறுக்கத்தக்கது; இது ஜனநாயக நடைமுறையை அவமதிக்கும் செயலாகும் என்றார்.

மே 2018 பொதுத் தேர்தலில் பாரிசானை ஐக்கிய அரசில் இருந்து வெளியேற்றுவதற்கான பெரும்பான்மை வாக்குகள் இருந்தபோதிலும், ஜாஹிட்டின் நடவடிக்கைகள் ஜனநாயக செயல்முறையை புறக்கணித்து உறுதியற்ற தன்மையை உருவாக்கியது என்றார்.

இது ஜாஹிட்டின் வெட்கக்கேடான செயல், ஆனால் இது தனது கட்சியை பாதுகாப்பதற்காக என்று அவர் கூறுவார். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், இது ஜனநாயக நடைமுறைக்கு எதிரான அவமானமாகவே பார்க்கிறேன், என்றார்.

 

 

-fmt