தனியார் துறை தொழிலாளர்களுக்கு ‘நியாயமான’ சம்பளம் தருவதாக அன்வார் நம்புகிறார்

தனியார் துறை, குறிப்பாக அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கும் எனப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொதுப்பணித்துறை ஊதிய சீர்திருத்தம், தொழிலாளர்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், தனியார் நிறுவனங்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான செய்தியாகவும் உள்ளது என்றார்.

“தனியார் துறை அவர்களின் சம்பள திட்டங்களை மதிப்பாய்வு செய்யும் என்று நான் நம்புகிறேன், இதனால் தொழிலாளர்களின் நிதி சுமையை மிகவும் நியாயமான ஊதியம் மற்றும் சம்பள உயர்வு திட்டத்துடன் குறைக்க முடியும், குறிப்பாகப் பெரிய லாபத்தை பதிவு செய்யும் நிறுவனங்கள்”.

“மாதாந்திர சம்பளம் ரிம2,000 க்கு குறைவாக இருக்க எந்தக் காரணமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் ‘மதானி பொது சேவை’ என்ற கருப்பொருளான மஜ்லிஸ் அமானத் பெர்தானா பெர்கித்மதன் அவாம் (Majlis Amanat Perdana Perkhidmatan Awam) 19வது பதிப்பில் அரசு ஊழியர்களிடம் உரையாற்றிய பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.

சம்பள உயர்வு என்பது அரச ஊழியர்களுக்கான வெகுமதி மட்டுமல்ல, அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உந்துதலாகவும் உள்ளது என்றார்.

பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறன் ஆகிய விஷயங்களை உள்ளடக்கியதால், சம்பள சரிசெய்தல் ஒரு தீவிரமான மாற்றம் என்று அவர் கூறினார்.