அயர் மோளேக்கில் 51 கல்லூரி மாணவர்கள் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டனர்

தியாங் துவாவின் மாரா புரொபஷனல் காலேஜ் ஐயர் மோலெக்கின்(Mara Professional College Ayer Molek, Tiang Dua) மொத்தம் 51 மாணவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு இன்ஸ்டிட்யூட் உணவகங்களின் உணவை உட்கொண்ட பிறகு, உணவு விஷமாகியதாகச் சந்தேகிக்கப்பட்டதால் ஜாசின் மருத்துவமனை மற்றும் அயர் மோலெக் ஹெல்த் கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் – 36 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் – வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு அனுபவித்ததாக மாநில கல்வி, உயர்கல்வி மற்றும் சமய விவகாரக் குழுத் தலைவர் ரஹ்மத் மாரிமான் தெரிவித்தார்.

ரஹ்மத் (மேலே) இந்தச் சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மாநில சுகாதாரத் துறை நேற்று மாலை 6.30 மணி முதல் 14 நாட்களுக்குப் பல்வேறு உணவுப் பொருட்களை விற்கும் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள ஏழு உணவகங்களை மூட உத்தரவிட்டுள்ளது.

“மலகா தெங்கா(Melaka Tengah) சுகாதார அலுவலகம் நேற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள்மீது ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை நடத்தியது, ஆனால் குறிப்பிட்ட காரணத்தை அடையாளம் காண முடியவில்லை, ஏனெனில் அனைத்து மாணவர்களும் உணவகங்ளிலிருந்து பல்வேறு வகையான உணவைச் சாப்பிட்டதாகத் தெரிவித்தனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் விளக்கினார்.

“எனவே, மலாக்கா சுகாதாரத் துறை, சுத்தம் மற்றும் சுகாதாரத்தை எளிதாக்குவதற்கு அனைத்து உணவகங்களின் செயல்பாட்டையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

வளாகத்தில் உள்ள ஏழு உணவங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனத்தில் உள்ள கிட்டத்தட்ட 400 மாணவர்களுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கக் கல்லூரி வெளிப்புற உணவு விற்பனையாளர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.