முகிடின்: எனது உரை முன்னாள் அகோங்கை அவமதிக்கும் வகையில் இல்லை

முன்னாள் பிரதமர் முகிடின் யாசின் தனது சர்ச்சைக்குரிய உரை, 15வது பொதுத் தேர்தலின்போது அகோங்காகப் பணியாற்றிய பகாங் சுல்தானின் மதிப்பிற்குரிய பங்கை அவர் எந்த வகையிலும் குறைக்கவில்லை என்று வலியுறுத்தினார்.

இந்த விவகாரம்குறித்து முகநூலில் உரையாற்றிய பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி நெங்கிரி இடைத்தேர்தலின்போது பேசியது தேசத்துரோகத்தை தூண்டும் நோக்கத்தில் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

“எனது அறிக்கை நாட்டின் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்று நான் நம்புகிறேன். எனது கருத்துக்கள் தொடர்பான உண்மைகளைத் தெளிவுபடுத்த காவல்துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்,” என்று அவர் கூறினார்.

இன்று முன்னதாக, பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா, முகிடின் உரைக்குத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், பாகோ எம்பி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை வலியுறுத்தினார்.