நேற்று மதியம் நீருக்கடியில் உள்ள ஒரு பொருளைத் தாக்கியபின்னர் வெள்ளத்தில் மூழ்கிய கடற்படை விரைவு தாக்குதல் கப்பல் ஜொகூரின் பெங்கராங்கிற்கு அப்பால் தென் சீனக் கடலில் முழுமையாக மூழ்கியது.
இரவு 8 மணிக்கு வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், தஞ்சங் பென்யுசுப்புக்கு தென்கிழக்கே இரண்டு கடல் மைல் தொலைவில் ஹாண்டலன் கிளாஸ் கேடி பெண்டேகர்(Handalan-class KD Pendekar sank) மாலை 3.45 மணியளவில் மூழ்கியதாகக் கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கப்பலை மீட்கும் பணியில் கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, என்ஜின் அறையில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கேடி பெண்டேகர் பகுதியளவு மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கப்பல் பயணம் செய்யும்போது தற்செயலாக நீருக்கடியில் உள்ள பொருளில் மோதியதில் கசிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
“கப்பலின் என்ஜின் அறையில் கசிவு கண்டறியப்பட்டதால், கட்டுப்பாட்டை மீறி வெள்ளம் ஏற்பட்டது”.
“கசிவைக் கட்டுப்படுத்தவும், கப்பலை நிலைப்படுத்தவும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால் அனைத்துக் குழுவினரும் மீட்கப்பட்டனர்”.
“கப்பலைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதே இப்போது எங்கள் முக்கிய கவனம்,” என்று அது கூறியது.
குழுவினர் பாதுகாப்பாக, தளத்திற்கு அனுப்பப்பட்டனர்
சம்பவத்தின்போது கேடி பெண்டேகர் 39 பணியாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது.
அனைத்து பணியாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு தஞ்சோங் பெங்கெலியில் உள்ள கேடி சுல்தான் இஸ்மாயில் கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவத்திற்கான காரணத்தை விசாரிக்கக் கடற்படை விசாரணை குழுவை அமைக்கும்.
மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம், காவல்துறை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கடல்சார் சமூக உறுப்பினர்கள் உட்பட KD Pendekar குழு உறுப்பினர்களுக்கு உதவுவதில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இது நன்றி தெரிவித்தது.
கடற்படையின் இணையத்தளத்தின்படி, கே.டி. பெண்டேகர் சுவீடனில் கட்டப்பட்டது, பின்னர் 1979 ஜூலை 27 அன்று கடற்படையால் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.