புத்ராஜெயா: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கடனுக்காக பணம் வசூல் செய்யும் த ஆலோங்கை கொலை செய்ததற்காக முன்னாள் பர்கர் (ரொட்டி) விற்பனையாளருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
நீதிபதி அஹ்மத் ஜைதி இப்ராஹிம் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, மாண்ட இங் யோங் சியானுக்கு எதிரான குற்றத்திற்கான தண்டனையை எதிர்த்து கமருதின் ரஹீமின் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இருப்பினும், அவரது மேல்முறையீட்டு மனுவை தூக்கு தண்டனைக்கு பதிலாக சிறைதண்டணையை நீதிமன்றம் அனுமதித்தது.
48 வயதான கமாருதீனுக்கு 12 பிரம்படிகள் அதோடு, செப்டம்பர் 11, 2017 முதல் சிறைத்தண்டனை தொடங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்டம்பர் 11, 2017 அன்று இரவு 10.40 மணியளவில் தெலுக் பாடிக், லுமுட்டில் உள்ள உணவுக் கடையின் அருகே கமருதீன் இந்தக் குற்றத்தைச் செய்தார்.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங் என்பவரிடமிருந்து RM1,000 கடன் வாங்கியதாகவும், RM 40 வட்டி மற்றும் அசல் தொகையாக 35 நாட்களுக்கு தினமும் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தனது வாதத்தில் கூறினார்.
எனினும், அந்தக் காலப்பகுதியில் அவர் நோயுற்ற உறவினர் ஒருவரை மலாக்காவில் பார்க்க வேண்டியிருந்ததால், பணம் செலுத்த முடியவில்லை.
சம்பவத்தன்று, தான் நடத்தி வந்த கடையில் கடனை வசூலிக்கச் சென்ற ஆலோங் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தனது (கமாருதீனின்) மனைவியை தன்னுடன் (இறந்தவர்) தூங்கச் சொன்னதாக ஆலோங் கூறியதுதான் தனது செயலுக்கு காரணம் என்றார் கமாருதின்.