தேச நிந்தனை குற்றச்சாட்டுக்கு முகைதினே பொறுப்பு – அன்வார் சாடல்

பிரதமர் அன்வார் இப்ராகிம், பெர்சாத்து தலைவர்  முகைதின் யாசின்  மீது தேச நிந்தனை சட்டம் பயன்படுத்துவது அரசாங்கத்தின் இரும்புப்பிடி அல்ல, அது அவரே தேடிக்கொண்ட வினை என்று சாடினார்.

பெர்சாத்து பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீனின் குற்றச்சாட்டிற்கு நேற்று பதிலளித்த அன்வார், அரச குடும்பத்திற்கு எதிராக அவர் கூறியதாக கூறப்படும் தேசத்துரோகக் கருத்துகளின் விளைவுகளை முகைதீன் சந்திக்க வேண்டும் என்றார்.

“முகைதினுக்கு எதிரான புகார் பகாங் அரண்மனையால் பதிவு செய்யப்பட்டது. எனவே, அவர் (ஹம்சா) குழப்பக்கூடாது. அவருக்குத் தெரியும், ஆனால் அவர் அரசியல் விளையாட விரும்புகிறார்.

“இந்தப் பிரச்சினையை பகாங் அரண்மனை மற்றும் சிலாங்கூர் அரண்மனை (கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி எம்டி நோர் சம்பந்தப்பட்ட வழக்கில்) எழுந்தது என்று நான் ஆலோசனை கூற விரும்புகிறேன்.

கோலாலம்பூரில் இன்று நடந்த அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், “ அவர் சட்டத்தை மீறுகிறார், எல்லையைத் தாண்டிவிட்டார் எனவே முகைதின்தான் அதைச் சமாளிக்க வேண்டும் என்றார்.