வெளிநாட்டுத் தூதுவர்கள் பாலஸ்தீனம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்

உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பாலஸ்தீனம் குறித்து கருத்து வெளியிடும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு மலேசியாவிலுள்ள வெளிநாட்டுதூதுவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசன் அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் கருத்துக்களை பிரதிபலிக்கும் அதே வேளையில், பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலையை கடுமையாக எதிர்க்கும் மலேசியாவின் உணர்வுகளையும் அவர்கள் புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஆயுத விநியோகம் மற்றும் சமாதானம் என்ற தலைப்பில் மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எட்கார்ட் டி ககன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்: அமெரிக்கத் தூதுவர் மேற்கு ஆசிய மோதல் குறித்து விவாதித்தார்.

அவர் சொன்னதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன் என்று முஹம்மது கூறினார். கருத்துக்கள் அவரது நாட்டின் சார்பாக இருந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பாலஸ்தீனியர்களின் அட்டூழியங்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய உலகளாவிய கண்ணோட்டத்தில் இருந்து விலகிவிடக்கூடாது. கருத்துக்கள் மனித நேயத்தின் எல்லைகளை மீறுகின்றன.

இஸ்ரேலை நேச நாடாக ஆதரிக்க நினைத்தாலும், பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலை சாதாரணமானது என்று சொல்லும் அளவிற்கு சென்று விடக்கூடாது. நாட்டிலுள்ள வெளிநாட்டுத் தூதர்கள் பேசும்போது கவனமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன், என்றார்.

 

 

-fmt