கஜானாவின் ரிம 3,000 குறைந்தபட்ச ஊதியத்தைப் பின்பற்றுங்கள்: தனியார் துறைக்குப் பிரதமர் வலியுறுத்தல்

பிரதமர் அன்வார் இப்ராஹிம்,  Khazanah Nasional Bhd தனது ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ரிம 3,000 ஊதியம் வழங்கும் முறையைத் தனியார் நிறுவனங்கள் பின்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“கசானா நேஷனல் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரிம 3,000 மற்றும் அதற்கு அதிகமாக நிர்ணயித்த ஒரு அமைப்பாக இருப்பதால், கசானா நேஷனலுக்கு நான் மிக உயர்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இன்று மாலை கோலாலம்பூரில் நடைபெற்ற கசானாவின் 30வது ஆண்டு விழாவில் அவர் பேசினார்.

கடந்த மாதம், மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) தனியார் துறைக்கான புதிய குறைந்தபட்ச ஊதியத்தை அறிவிப்பதை தாமதப்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியது.

முன்னாள் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் ஆட்சிக் காலத்தில், 2022 மே மாதம், குறைந்தபட்ச ஊதியத்தை அரசாங்கம் கடைசியாக மறுஆய்வு செய்தது.

அந்த நேரத்தில் இஸ்மாயிலின் நிர்வாகம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் துறை நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 1,200 லிருந்து ரிம 1,500 ஆக உயர்த்தியது.

MTUC துணைத் தலைவர் மட்கர் சிவாங், பிரதமர் அன்வார் இப்ராகிம் அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம்குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

மாட்‌கார், Bank Negara Malaysia, United Nations Children’s Fund (Unicef), மற்றும் Employees Provident Fund (EPF)  ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை மேற்கோள் காட்டி, ஒரு பொருத்தமான சம்பளம் ரிம. 2,000 க்கு மேல் இருக்கும் என்று கூறினார்.

மே 16 அன்று, பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி, Unicef முன்மொழியப்பட்ட ரிம 2,102 மாத குறைந்தபட்ச ஊதியம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.